20 வருடங்களின் பின்னர் குடியேறியவர்களை நேரில் சென்று சந்தித்த சிறிதரன் எம்.பி

Report Print Arivakam in சமூகம்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இந்திராபுரம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் விஜயம் மேற்கொண்டார்.

குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்துள்ளனர்.

இந்திராபுரம் பகுதியில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், ஏனைய தேவைகளையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.

சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் ஒரு தொகுதி மக்கள் இங்கு மீள்குடியேறி இருக்கின்றனர். ஏனைய ஒருதொகுதி மக்கள் மிதிவெடி அகற்றும் பணிகள் நிறைவு பெறாததால் வெளி மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.