மினி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் உலர் உணவும் விநியோகம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு கிராமத்தில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட 71 குடும்பங்களுக்கு உலர் உணவும் நிவாரணமும் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வாகரைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவற்றை வழங்கி வைத்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் 03ஆம் திகதி ஓமடியாமடுப் பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றினால் அங்குள்ள விவசாயக் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த இயற்கை இடரில் சிக்கி அந்தக் கிராமத்திலிருந்த விவசாயிகளின் சுமார் 71 வீடுகள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers