கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பூநகரி குளம் அமைப்பது தொடர்பில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர் இன்று சிலருடன் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி, பூநகரி, பகுதியில் கொக்குடையான், மாளாப்பு உள்ளிட்ட பத்து வரையான சிறு குளங்களை இணைத்து பாரிய நீர் தேக்கமாக அமைப்பது தொடர்பில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருந்தது.

700 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் இந்திய குழுவினர் வினவியதாகவும், அவர்களுக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நேற்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை குறித்த திட்டம் அமையப்போகும் இடம் தொடர்பில் நேரடி கள விஜயம் மேற்கொண்டு இந்திய குழுவினர் ஆராயவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் குழுவில் இடம்பிடித்திருந்த இருவர் மற்றும் கிளிநொச்சி பிரதி நீர்பாசன பணிப்பாளர் எஸ்.சுதாகரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, குளத்தின் அபிவிருத்திக்காக வகுக்கப்பட்ட திட்டங்களும் குறித்த குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Latest Offers