துப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Manju in சமூகம்

துப்பாக்கியுடன் அமைதியின்மையை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட தெபுவன பொலிஸ் சார்ஜன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தன்னால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மணல் லொரியை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலையிட்டு விடுவித்தமை தொடர்பில் கோபமுற்ற பொலிஸ் சார்ஜன் துப்பாக்கியுடன் போராட்டம் நடத்தினார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers