யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்! சிறப்பு அதிரடிப்படையினர் குவிப்பு

Report Print Murali Murali in சமூகம்

யாழ். கோண்டாவில் பகுதியில் சற்றுமுன்னர் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியிலுள்ள சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பகுதியில் சிறப்பு அதிரடிபடையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள் - சுமதி