ஈழத்தின் அரங்கியல் கலைஞர் மரணம்! சோகத்தில் தமிழர்கள்

Report Print Nivetha in சமூகம்

தீவிர அரங்க விசுவாசியாக தனது கலைப் பயணத்தை ஆற்றியவரும், திருமறை கலாமன்றத்தின் மூத்த கலைஞருமான ஜி. பி. பேர்மினஸ் இன்று காலமானார்.

ஈழத்தின் அரங்க புலத்தில் அரைநூற்றாண்டுக்கு மேல் இவர் பணியாற்றியுள்ளார்.

60 நாடகங்களுக்கு மேல் நடித்ததுடன், நாடக அரங்ககல்லூரி உட்பட பல அரங்கநிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, சிறந்த நடிகர், தயாரிப்பாளர், அரங்கப் பயிற்றுனர் என பன்முகப் பணிகளைப் புரிந்த இவர் 50 ஆண்டுகளுக்கு மேல் திருமறை கலாமன்றத்தில் கலைச்சேவை ஆற்றியுள்ளார்.

தமிழில் பல நாடகங்களை இயக்கியுள்ளார். இவரின் இறப்பு தமிழர்களுக்கு பேரிழப்பாகும். ஜி. பி. பேர்மினஸின் மரண செய்தி அனைவரும் சோகதை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers