அதிகளவில் ஆபத்தில் சிக்கும் இலங்கை தமிழர்கள்! ஆய்வில் வெளியான தகவல்

Report Print Kumar in சமூகம்

இலங்கையில் நீரிழிவு நோயினால் அதிகளவில் தமிழர்களே பாதிக்கப்படுவதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்தார்.

இலங்கையில் 2010ஆம் ஆண்டு வைத்தியர்கள் குழுவொன்று செய்த ஆய்வின் அடிப்படையில் இலங்கை தமிழர்களே இந்த ஆபத்திற்கு அதிகளவு உள்ளாவதாக தெரிவித்துள்ளார்.

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் சௌக்கியப் பராமரிப்புப் பீடத்தினால் பொதுமக்களிற்கான நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வைத்திய, தாதிய மற்றும் சித்த மருத்துவத்துறை மாணவர்களின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் மட்டக்களப்பில் காணப்படும் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வருடாந்தம் இலங்கையில் வருடாந்தம் 12 பேரில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு உள்ளாவதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் விவேகானந்தராஜா இங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 1.16மில்லியன் மக்கள் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளதாகவும் இவர்களில் 1.14 வீதமானோர் கடந்த ஐந்து வருடத்தில் மரணத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் எட்டாவது இடத்தில் இருக்கும் நீரிழிவு நோய் எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஐந்தாவது இடத்திற்கு செல்லும் நிலையிருப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Latest Offers