வெலிக்கந்தையில் மோட்டார் குண்டொன்று மீட்பு

Report Print Rusath in சமூகம்

வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலித்தென்ன எனும் கிராமத்தில் 81 மில்லிமீற்றர் மோட்டார் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டு நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குழாய் நீர் விநியோகத்திற்காக நிலத்தடியில் குழாய்களை பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் குண்டு வெளிக்கிளம்பியதாக குழாய் பொருத்துநர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த வெலிக்கந்தை பொலிஸார் குண்டு செயலிழக்க செய்யும் படை நிபுணர்களை வரவழைத்து அவர்கள் மூலமாக குண்டை மீட்டுள்ளனர்.

இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட குண்டாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers