பளையை வந்தடைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி

Report Print Yathu in சமூகம்

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை வரை மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடைபவனியானது பளை பிரதேசத்தை வந்தடைந்துள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் போராட்டத்தின் முடிவில் நடைபவனிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக நேற்று காலை பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய நடைபவனி இரவு ஏழு மணியளவில் பளை பேருந்து தரிப்பிடத்திற்கு வந்துள்ளது.

இதேவேளை இங்கிருந்து இயக்கச்சி நோக்கி நடைபயணம் ஆரம்பமாகி இன்று இயக்கச்சியுடன் நிறைவுபெற்று நாளை கிளிநொச்சி நோக்கி நகரவுள்ளது.

Latest Offers