கொழுந்து பறிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Thirumal Thirumal in சமூகம்

மஸ்கெலியாவில் கொழுந்து பறிக்க சென்ற பெண் தொழிலாளியொருவர் 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 56 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான சின்னையா தெய்வானை என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் காட்மோர் ஆற்றில் விழுந்தே பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சடலத்தை பிரேத பரிசோதணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Latest Offers