14 வயதிற்கு குறைந்தவர்கள் தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி அறிக்கை

Report Print Shalini in சமூகம்

14 வயதிற்கு குறைவானவர்களே உளவியல் ரீதியிலான தாக்கங்களில் அதிகளவில் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் உலக மனநல ஆரோக்கிய தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளவர்களில் அரைவாசிப் பகுதியினர் 14 வயதிற்குக் குறைவானவர்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அந்த வயதில் அடையாளங் காணப்படுவதில்லை.

இதனால் அவர்களுக்குரிய சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை.

எனவே சிறுவயதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 15 – 29 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers