முதல் மகளிர் மாவீரர் மாலதியின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல்

Report Print Nesan Nesan in சமூகம்

முதல் மகளிர் மாவீரர் மாலதி அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - வெல்லாவெளியில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு, அம்பாறை இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வுக்கான பொதுச்சுடரினை போரதீவுபற்று தவிசாளர் யோ.ரஜனி ஏற்றி வைத்தார். மலர் மாலையினை கட்சியின் கிழக்குக்கான பேச்சாளர் கோ.சாந்தன் சூட்டினார்.

இதில், போராளிகள் பொது மக்களின் மலர் வணக்கங்களுடன் நினைவுரைகளும் இடம்பெற்றுள்ளது.

Latest Offers