இறைச்சிக்காக பசு மாட்டை கொண்டு சென்றவர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

திம்புள்ள - கொட்டகலை, பத்தனை பகுதியில் அனுமதிப் பத்திர விதி முறைகளை மீறி இறைச்சிக்காக பசு மாடு ஒன்றை கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணைகளின் பின் லொறி மற்றும் சாரதியை ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers