கிண்ணியாவில் நபர் ஒருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டில் கைக் குண்டு ஒன்றினையும், 15 கிராம் கேரளா கஞ்சாவையும் வைத்திருந்த ஒருவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டுள்ளார்.

பெரியாற்று முனை, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கஞ்சா வியாபாரி என்பதோடு அவருக்கு எதிராக பல வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலே வீட்டில் கைக் குண்டு ஒன்றினையும், பதினைந்து கிராம் கேரளா கஞ்சாவையும் வைத்திருந்த நிலையிலே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers