அடையாளம் தெரியாதவர்களால் சிற்றூர்திகள் மீது தாக்குதல்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில், பரந்தன் - முறிகண்டி சிற்றூர்திகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதல்கள் ஏ9 பிரதான வீதியில் நேற்றும், நேற்று முன்தினமும் பகல் வேளைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்து கொண்டு வரும் தரப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்று விடுவதாக சிற்றூர்தி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான தாக்குதல்களில் சிற்றூர்திகளின் கண்ணாடிகளே உடைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கத்தின் கூட்டத்தில் பேருந்து உரிமையாளர்களுக்கும், சிற்றூர்தி உரிமையாளர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.

அதன் விளைவாகவே இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சிற்றூர்தி உரிமையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers