இலங்கையில் போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் வெளியான தகவல்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் கணக்குகளில் ஐந்தில் ஒன்று போலியானது என சுகாதார ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயன்பாட்டில் உள்ள 20 வீதமான பேஸ்புக் கணக்குகள் போலியானவை என பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களில் 4.5 மில்லியன் மக்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 33 வீதமானவர்கள் பெண்கள் எனவும் 67 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இலங்கைக்குள் இணையத்தளம், பேஸ்புக், இலத்திரனியல் பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

எனினும் அதனை கண்டுபிடிக்க அறிவியல் ரீதியான கணக்கெடுப்பு தேவை என கொழும்பு ரிஜ்வே மருத்துவமனையின் மனநல தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் அபோக்ஷா ஹேவாகிகன தெரிவித்துள்ளார்.

சீனாவில் 10.2 வீதமானோரும், தென் கொரியாவில் 20 வீதமானோரும் ஜப்பானில் 9.2 வீதமானோரும் இணையத்தளத்திற்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சுகாதார ஊக்குவிப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

Latest Offers