அபராதம் விதித்த பொலிஸாருக்கு சாபம் விட்ட பெண்

Report Print Steephen Steephen in சமூகம்

வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த மற்றுமொரு வாகனத்தை ஓட்டிய பெண்ணுக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.

மாத்தளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பிரிவு பொலிஸார் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அதற்கான பற்றுச்சீட்டை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

எனினும் தாம் மீது குற்றமில்லை எனவும், பொலிஸார் தமது வயிற்றை நிரப்பிக்கொள்ள தன்னிடம் அபராத தொகையை பெற்றுக்கொண்டதாகவும் கூறி பெண், பொலிஸாரை சாடுகிறார்.

இடம் இருந்த காரணத்தினாலேயே தாம் வாகனத்தை முந்தியதாகவும் கூறுகின்றார். பெண்ணுடன் வந்த ஆண் ஒருவர் இந்த சம்பவத்தை தனது செல்போனில் படம்பிடித்துள்ளார்.

குறித்த பெண்ணும், ஆணும் பொலிஸாருக்கு சாபம் விடுகின்றனர். பிள்ளைகள் உட்பட குடும்பத்தினருக்கு வயிற்றோட்டம் ஏற்படும் என்று சபிக்கின்றனர்.

கடுமையான ஏச்சு பேச்சுகளுக்கு பின்னர் பொலிஸார் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டுச் செல்கின்றனர்.

Latest Offers