அரை நிர்வாண புகைப்படம் எடுத்த இளைஞர்கள் விடுதலை

Report Print Manju in சமூகம்

வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல மலையில் அரை நிர்வாண புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை நீதவான் கோசல பண்டார இளங்கசிங்கிற்கு முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் முதல் சந்தேக நபரான பாடசலை செல்லும் மாணவன் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் ஏனைய சநதேக நபர்கள் இருவரும் ரூபா 1500 அரசாங்க கட்டணமாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுத்ததாக வழக்கு விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.