ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் இது வரை வீடு திரும்பவில்லை

Report Print Navoj in சமூகம்

கண்டலடி கடற்கரையில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சக மீனவர்கள் மூன்று பேருடன் கடந்த 8ம் திகதி கடலுக்கு சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என்றும், ஏனையோர்கள் அன்று மாலையே கரையினை வந்தடைந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

க.ரவிச்சந்திரன் (37 வயது) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணமால் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேளை, காணாமல் போனவரின் மனைவி இச்சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மீனவரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசத்தின் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers