வடமாகாண விவசாய அமைச்சினால் வவுனியாவில் கண்காட்சி

Report Print Theesan in சமூகம்

காலத்தின் சவாலுடன் உணவு உற்பத்தியை நோக்கி எனும் தொனிப்பொருளில் வடமாகாண விவசாய கண்காட்சி வவுனியா முருகனூர் விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

வவுனியா விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் மாகாண உதவிப்பணிப்பாளர் ஏ. சகிலா பானுவின் ஒழுங்கமைப்பில் வட மாகாண நிதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் வறட்சி மற்றும் மழை காலங்களில் விவசாய உற்பத்தியினை மேற்கொள்வதற்கு விவசாயிகள் முகம்கொடுக்க வேண்டிய நுட்பங்களை அடிப்படையாக கொண்டு உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை புதிய நுட்பங்களையும் இலகு முறையிலான விவசாய செய்கையையும் முன்னெடுத்து வருமானத்தினை அதிகரித்து கொள்வதன் மூலோபாயங்கள் தொடர்பான தெளிவூட்டல்களும் விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவனேசன் பிரதம அதிதியாகவும், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம்.தியாகராசா, ஏ.ஜெயதிலக, வவுனியா அரசாங்க அதிபர் எச். எம். ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஷ்குமார், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் வட மாகாண விவசாய பணிப்பாளர் வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் விஜயகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers