கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை

Report Print Gokulan Gokulan in சமூகம்

நீண்ட போராட்டத்தின் பின் கிழக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களை ஆசிரியர் சேவை 3 -।।க்கு உள் வாங்குவதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 12,13 மற்றும்14ஆம் திகதிகளில் இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் 4ஆம் மாடியில் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில்,

கடந்த வருடம் தொண்டராசிரியர் நியமனத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது, அதன்பின் நியமனத்துக்கு தகுதியான தொண்டர்களின் விபரங்களை நாம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிடம் கோரியிருந்தோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பே தொண்டராசிரியர்களின் விபரங்கள் மாகாண அமைச்சில் இருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த விபரங்களை அடிப்படையாக கொண்டு தொண்டராசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு நவம்பர் மாதம் 12,13 மற்றும் 14ஆம் திகதிகளில் இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் நான்காம் மாடியில் இடம்பெறும்.

நேர்முகத்தேர்வுக்காக தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான கடிதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.