வவுனியா நகரசபையினுள் ஈ.பி.ஆர்.எல்.எவ் அலுவலகம்? நிராகரிக்கும் தவிசாளர்

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரசபைக்குள் தவிசாளருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் குளிரூட்டப்பட்ட சொகுசு முறையில் அமைக்கப்பட்டுள்ள அறை ஒன்றில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சர்வதேச அலுவலகம் ஒன்று செயற்பட்டு வருவதாகவும், அவர்களின் ஆதரவாளர்கள், பங்காளிக் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகரசபைத்தவிசாளருக்கு அங்கிருந்து ஆலோசனைகள் வழங்கிவருவதாகவும் கடந்த நகரசபை அமர்வின் போது நகரசபை உறுப்பினர்கள் சிலர் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வவுனியா நகரசபை தவிளார் இ.கௌதமனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

குற்றச்சாட்டினை மறுத்துள்ளதுடன் அவ்வாறு அலுவலகம் எதுவும் கிடையாது எனவும், குறித்த பகுதி எனது அலுவலக பாவனையில் உள்ளதாகவும் குறித்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை தவிசாளர் அலுவலகத்திற்குள் ஒரு பகுதியில் குளிரூட்டப்பட்ட சொகுசு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் சர்வதேச அமைப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், பங்காளிக்கட்சியின் உறுப்பினர்களை அங்கு காணக்கூடியதாக உள்ளதாகவும், நகரசபை ஒரு கட்சி அலுவலகம்போல செயற்பட்டு வருவதாகவும் நகரசபை உறுப்பினர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers