வெளிநாடு ஒன்றினால் இலங்கையில் முதன்முறையாக அறிமுகம் செய்யும் வசதி!

Report Print Ajith Ajith in சமூகம்

கட்டாருக்கான வீசா அலுவலம் இன்று இலங்கையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

உலக நாடுகளில் முதல் தடவையாக கட்டார் தமது நாட்டுக்கான வீசா நிலையத்தை இலங்கையில் திறக்கவுள்ளது.

கட்டார் நாட்டுக்கான முதலாவது வெளிநாட்டு வீசா நிலையமாக இது அமையவுள்ளதாக கல்ப் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் திறக்கப்படவுள்ள இந்த நிலையத்துக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் உட்பட்ட 8 நாடுகளில் வீசா நிலையங்களை கட்டார் திறக்கவுள்ளது.

கட்டாருக்கு செல்வோரின் நலன்கருதியே இந்த நிலையம் திறக்கப்படவுள்ளதாக அந்நாட்டுக்கான வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

Latest Offers