இலங்கை ரசிகர்களால் ஏற்படுத்தப்பட்ட தகராறு! குழப்பமடைந்த இங்கிலாந்து வீரர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் குடிபோதையில் மோசமாக நடந்து கொண்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர.

கைது செய்யப்பட்டவர்கள் கலேவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டி இடம்பெற்றது.

பகல் இரவு போட்டியான இந்த போட்டியை பார்ப்பதற்கு பெரிய அளவில் ரசிகர்கள் வருகைத்தரவில்லை. இதனால் பார்க்க வந்தவர்கள் அங்கும் இங்கும் நடமாட ஆரம்பித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் மழை பெய்ய ஆரம்பித்தமையினால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் அங்கிருந்தவர்கள் மதுபானம் அருந்தியுள்ளனர்.

மதுபானம் அருந்தியவர்கள் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளமையினால் பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கை ரசிகர்களின் சிலரின் மோசமான செயற்பாடு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Latest Offers