ஒன்றரை வயதான குழந்தைக்கு தாயால் நேர்ந்த கொடூரம்

Report Print Rusath in சமூகம்

தாய் ஒருவரின் மோசமான செயல் காரணமாக ஒன்றரை வயதான குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஓட்டமாவடியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் தாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த வைத்தியசாலையின் மனநல பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றரை வயதான ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் தாய் துண்டித்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 38 வயதான தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தையின் இரு விதைப்பைகளையும் துண்டித்துள்ளார்.

அக்கம் பக்கத்தார் குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டு ஓடிச் சென்று குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இதேவேளை குழந்தையின் தாய் அவ்வப்போது சித்தப்பிரமைக்கு உள்ளாவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers