விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமன தாமதம்! நாடாளுமன்ற உறுப்பினருடன் பேச்சு

Report Print Mubarak in சமூகம்

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமன தாமதம் குறித்து கல்வியமைச்சில் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப்பை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 3850 பேர் சார்பாக சிங்களமொழி மூலம் தெரிவு செய்யப்பட்ட குழுவினர் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டோர் நியமன தாமதத்தால் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சினை பற்றி கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரிற்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டோரின் பிரச்சினைகளை கேட்டறிந்த கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் கருத்து தெரிவிக்கையில்,

நியமன தாமதத்திற்கான காரணத்தையும், நியமனம் வழங்குவதற்காக கல்வியமைச்சு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், நியமனத்தை துரிதப்படுத்த கல்வியமைச்சின் காண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் சம்பந்தமான ஆவண ரீதியான ஆதாரங்களையும் காண்பித்துள்ளார்.

நியமனம் கிடைக்கும் வரை தான் முற்று முழுதான முயற்சியை தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சார்பாக மேற்கொள்வேன் எனவும் உறுதி மொழியளித்துள்ளார்.

மேலும், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் அவர்கள் இதுவரை மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியது.

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

அத்தோடு, நியமனம் கிடைக்கும் வரை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டோர் சார்பாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Latest Offers