பாடகரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

Report Print Steephen Steephen in சமூகம்

காலஞ்சென்ற பிரபல சிங்கள பாடகரும், நடிகருமான ரொனி லீச்சின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ரொனி லீச்சின் உடல் கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற ஜனாதிபதி இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

ரொனி லீச்சியின் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஜனாதிபதி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ரொனி லீச், அவுஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்றிருந்த வேளையில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் இறுதி கிரியைகள் இன்று மாலை கல்கிஸ்சை மயானத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers