சுறா மீன்களின் செட்டையை வைத்திருந்தவர்களுக்கு நீதிமன்றம் தீரப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

சுறா மீன்களின் செட்டைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் 60,000 ரூபாய் வீதம் தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலையை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் இன்று திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் 6 சந்தேகநபர்களையும் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரும் மாத்தறை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்த 35 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும், கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் ஈ. எம். சீ. போயா கோட தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள், ஒரு மாத காலமாக கடலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த படகினை சோதனையிட்ட போது சுறா மீன்களின் செட்டைகள் இருந்ததாகவும் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சுறா மீன்களை வெட்டி அதனுடைய செட்டைகளை தனியாக வைத்திருப்பது குற்றம் எனவும் தெரிவித்த கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள், இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் நடைபெறக் கூடாது எனவும், நீதிமன்றம் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தை கோரி இருந்தனர்.

Latest Offers