வவுனியாவில் கோரவிபத்து! இருவர் பலி

Report Print Theesan in சமூகம்

வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் பயணித்த நபர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜகருணா (வயது -58) , த.பாஸ்கரன் (வயது - 42) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெ.விஜிதரன் என்ற நபர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers