15 ஆண்டுகள் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி

Report Print Steephen Steephen in சமூகம்

வீசா அனுமதியின்றி இலங்கையில் சுமார் 15 ஆண்டுகள் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜையை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், சுற்றுலாப் பொலிஸ் பிரிவினரால் கைசெய்யப்பட்டுள்ளார்.

56 வயதான பாகிஸ்தான் பிரஜையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் சுற்றுலா விடுதிகளில் கெசினோ சூதாட்ட தரகராக செயற்பட்டு வந்துள்ளதுடன் அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இந்த நபர் குறித்து கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்ற பொலிஸ் குழு சந்தேக நபரை கைதுசெய்துள்ளது.

Latest Offers