விவசாய பிரதி அமைச்சரின் எல்லை தாண்டிய அர்ப்பணிப்பு

Report Print Vamathevan in சமூகம்

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக செயற்பாடு இன்றி காணப்படும் கலங்கரை விளக்கை நிர்மாணித்து தருமாறு குருநகர் கிழக்கு கடல்தொழிலாளர் கூட்டுறவினால் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனுக்கு, மாநகரசபை உறுப்பினர் சாந்தரூபன் ஊடாக மகஜர் இன்று மதியம் கையளிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கலங்கரை விளக்கு பகுதிக்கு,மாநகர சபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட விவசாய பிரதி அமைச்சரின் இணைப்பாளருமான சாந்த ரூபன் கடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட வேண்டிய கலங்கரை விளக்கு பகுதியை பார்வையிட்டிருந்தார்.

ஆழ்கடல் மீன்பிடிதொழிலை மேற்கொள்பவர்கள் கலங்கரை விளக்கு உயரம் இன்மையினால் திசை மாறிய பயணங்களினால் உயிராபத்தை எதிர்நோக்குவதாகவும், இடி தாங்கி பொருத்தப்படாமையினால் அண்மைக்காலமாக ஏழு பேர் மரணித்துள்ளதாகவும் குருநகர் மீனவர்கள் சார்பாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை கலங்கரை விளக்கை உரிய முறையில் நிர்மாணிப்பதன் ஊடாக இடி தாங்கியையும் பொருத்துவதன் மூலமும் இனிவரும் காலங்களில் உயிராபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் எனவும் மாநகர சபை உறுப்பினர் சாந்த ரூபன் உறுதியளித்திருந்தார்.

மேலும் விவசாய பிரதி அமைச்சர் ஊடாக விடையத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கைகள் இடம்பெற ஆவண செய்யப்படும் எனவும் மாநகர சபை உறுப்பினரும் யோகா மற்றும் கராத்தே ஆசிரியருமான சாந்தரூபன் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன் போது வட்டுக்கோட்டை அமைப்பாளரும் விவசாய பிரதி அமைச்சரின் வட்டுக்கோட்டை இணைப்பாளருமான ரஜிகரன் அவர்களும் இணைந்திருந்து நிலைமைகளை அவதானித்திருந்தார்.

Latest Offers