பலாங்கொட நகர சபையில் மோதிக் கொண்ட தலைவர்கள்

Report Print Manju in சமூகம்

பலாங்கொட நகர சபையில் தற்போதைய தலைவருக்கும், முன்னாள் தலைவருக்கும் இடையில் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சபையில் இன்று காலை ஆரம்பமான கூட்டத்தின்போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொட நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை ஆரம்பமாகவிருந்த நேரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சபை தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.

வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சபையின் முன்னாள் தலைவரும் இருந்துள்ளார். எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கையிலும் கறுப்பு பட்டியை அணிந்திருந்தனர்.

Latest Offers