திருகோணமலை மாவட்ட காணிப் பிரச்சினைகள் சம்மந்தமான கலந்துரையாடல்

Report Print Mubarak in சமூகம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று நாடாளுமன்றத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது மாவட்டத்தின் காணிப்பிரச்சினைகள் மற்றும் எல்லையிடுதல், போன்ற விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடலில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, சுகாதார பிரதி அமைச்சர் பைஸால் காஸ்ஸிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.நஸீர், மற்றும் எஸ்.எஸ்.தௌபீக் , காணி அமைச்சின் செயலாளர் கருனாரத்ன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பக்குமார, காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தயாரத்ன, காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் எம்.பி. முபாரக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்காளான மீஷான், பதீஸ், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் மற்றும் ஏனை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Latest Offers