இலங்கையில் யானை பார்க்க சென்ற பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நெருக்கடியான சூழ்நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஓய்வு நாளான நேற்று மின்னேரியா வனவிலங்கு பூங்காவுக்கு சென்ற, கிரிக்கெட் வீரர்களின் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.

தீவிர முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவர்களால் வாகனத்தை வெளியில் எடுக்க முடியவில்லை. எனினும் இலங்கையர்கள் சிலரின் உதவியுடன் புதையுண்ட வாகனம் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டி தம்புள்ளையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அது பாதியில் கைவிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இரு அணி வீரர்களும் தம்புள்ளையில் தங்கியுள்ளனர். நேற்றைய ஓய்வு நேரத்தை வீணாக்காத இங்கிலாந்து வீரர்களின் இலங்கையின் அழகை ரசித்துள்ளனர்.

மின்னேரியா, சீகிரியா மலை குன்று உள்ளிட்ட பல பகுதிகளை சென்று பார்வையிட்டதுடன், இயற்கையின் அழகை கண்டும் வியந்துள்ளனர்.

இங்கிலாந்து வீரர்கள் தங்களது சந்தோஷத்தை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

Latest Offers