யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் 'உத்தியோகபூர்வ பணி – ஜனாதிபதி மக்கள் சேவை' இடம்பெறுகின்றது.
குறித்த நடமாடு சேவைகள் இன்று நெடுந்தீவு மஹா வித்தியாலயத்தில் நடைபெறுகின்றன.
இதன் ஊடாக பிறப்பு சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டைகள், திருமணப் பதிவு சான்றிதழ்கள் மற்றும் மரணப்பதிவு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவெல மற்றும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக இடம்பெறும் இந்த நடமாடும் சேவையானது நாளைய தினம் நல்லூரிலும், நாளை மறுதினம் பருத்தித்துறையிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.