யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரை நகரில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளை பொன்னாலைச் சந்தியில் வைத்து சோதனையிட்ட போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், இவர்களிடம் இருந்து போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் நல்லூரில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் வைத்தே போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.