இப்படியொரு உயர் பொலிஸ் அதிகாரியா? அதிகாலையில் கதவை திறந்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Vethu Vethu in சமூகம்

கண்டியில் நள்ளிரவில் வீதியில் குப்பை போட்டுச் சென்ற நபரை தேடி சென்ற பொலிஸார் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

தலாத்துஓய, மாரசஸ்ஸன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தலாத்துஓய பொலிஸ் நிலையத்தில் உயர் அதிகாரி ஒருவர் கடமை நடவடிக்கைக்காக அதிகாலை வேளையில் சென்றுள்ளார்.

பயணித்து கொண்டிருந்த போது வீதியின் ஓரத்தில் கிடந்த குப்பை பையை அவதானித்துள்ளார். இதன் போது அவர் ஓட்டிச்சென்ற முச்சக்கர வண்டியை நிறுத்தி குப்பை பையை எடுத்துப் பார்த்துள்ளார்.

அதில் விலாசம் குறிப்பிடப்பட்ட காகிதங்கள் கிடைத்துள்ளன. அந்த கடிதங்களில் பெற்ற தகவலுக்கு அமைய வீட்டின் உரிமையாளரை குறித்த பொலிஸ் அதிகாரி கண்டுபிடித்துள்ளார்.

அதற்கமைய விலாசத்தில் உள்ள உரிமையாளரை தேடிச் சென்ற பொலிஸ் அதிகாரி வீட்டின் கதவை கட்டியுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் கதவை திறந்த பின்னர் “இனிய காலை வணக்கம் சர். நீங்கள் கொண்டு சென்ற குப்பை பை வீதியில் விழுந்து கிடந்தது. வேறு யாரும் கொண்டு சென்று விடுவார்கள். அதனால் தான் தேடி வந்தேன். என்னுடன் வந்தால் அதனை எடுத்துக் கொள்ளலாம்...” என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்போது ஒன்றும் கூறி கொள்ள முடியாத வீட்டின் உரிமையாளர், அதிகாரியின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்று குப்பையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளார். சட்டரீதியான தண்டனை வழங்காமல் இவ்வாறான தண்டனை வழங்குவதன் ஊடாக சூழலை சுத்தப்படுத்தி விடலாம் என பலர் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers