கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டுள்ளார்.

கிண்ணியா, சூரங்கல் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் அவரிடம் இருந்து எட்டு கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியிருந்தனர்.

தற்போது கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக இதன்போது பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை, மாவட்டத்தில் மொரவெவ பொலிஸ் பிரிவில் ரொட்டவெவ, நாமல்வத்த மற்றும் மூதூர் கிண்ணியா போன்ற பகுதிகளில் அதிகளவில் கேரள கஞ்சா விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கூறியுள்ளனர்.

Latest Offers