ரயிலில் மோதுண்டு ஒருவர் பரிதாபமாக பலி

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் ரயிலில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கறுவப்பங்கேணி வயிரவர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள புகையிர தண்டவாளத்தில் நேற்று இரவு அமர்ந்திருந்த முதியவரே இவ்வாறு ரயிலில் மோதுண்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் புன்னைச்சோலையினை சேர்ந்த கந்தையா வடிவேல் என்னும் 71வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers