இளைஞனின் வயிற்றுக்குள் சிக்கிய பெருந்தொகை பொருள்! அதிர்ச்சி அடைந்த வைத்தியர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

தம்புள்ளையில் இளைஞன் ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

31 வயதான இளைஞனின் வயிற்றில் இருந்து பெருந்தொகை கண்ணாடி துண்டுகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.

தொழில் ரீதியாக சாகசம் செய்யும் இளைஞன், கண்ணாடி துண்டுகளை விழுங்கி மக்களை மகிழ்வித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆபத்தான கண்ணாடி துண்டுகளை விழுங்கிய குற்றச்சாட்டில் குறித்த இளைஞனை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தம்புளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது, அவரின் வயிற்றில் இருந்து பெருமளவு கண்ணாடி துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு சென்று கண்ணாடி துண்டுகளை விழுங்கி சாகசம் செய்து வந்துள்ளார்.

இதற்கு முன்னர் 6 தடவைகள் அவரது வயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொண்டு கண்ணாடி துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers