மாணவனை கொலை செய்த நபருக்கு 22 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை

Report Print Steephen Steephen in சமூகம்

14 வயதான பாடசாலை மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நபருக்கு 22 ஆண்டுகளின் பின்னர் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதனை தவிர குற்றவாளி இரண்டு பேரை கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்திய குற்றத்திற்கு தலா இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி நிட்டம்புவை நிக்கஹெட்டிகந்தை பிரதேசத்தில் ஏ.டி.அஜித் ரோஹன என்ற பாடசாலை மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்து, மேலும் இரண்டு பேருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 5 பிள்ளைகளின் தந்தையான 59 வயதான ஹெல்ல தேவகே கருணாரத்ன என்பவருக்கே இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த காலத்தில் குற்றவாளிக்கு 37 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers