மன்னாரில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

அருட்பணி செ.அன்ரன் தலைமையில் மத தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வொன்று மன்னாரில் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று மாலை மன்னார் வாழ்வுதயம் பொது மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர், சிலாபத்தை சேர்ந்த சர்வ மத பிரதிநிதிகள், மன்னார் மாவட்ட சர்வமத பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சமய தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான அறிமுக நிகழ்வும், அதனை தொடரந்து கருத்துக்களை பரிமாறி கொள்ளும் நிகழ்வும், இறுதியில் பொது கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.

Latest Offers