இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! இயற்கை கொடுத்த அற்புதக் கொடை

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் ஆயிரக்கணக்கான வருடங்கள் நீர் வற்றிப் போகாத நிலையில் காணப்படும் நீர்த்தேக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் அற்புத கொடையாக விளங்கும் இந்த நீர்த்தேக்கம் மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ளது.

கெபத்திகொல்லாவ நகரத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் எப்போதும் வற்றிப் போகாத நீர்த்தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வறட்சியான காலநிலை காணப்பட்டாலும், இங்கு ஒருபோதும் நீர் வற்றிப் போகாது. எப்போதும் நீர் குளிர்ச்சியாகவே இருக்கும் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்களின் குடிநீர் தேவையை அதிசய நீர்வீழ்ச்சி போக்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

மாத்தளை பிரதேசத்தில் பூமிக்கடியில் இருந்து இந்த சுத்தமான நீர் வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers