தமிழர் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு! வசமாக சிக்கிய நால்வர்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

தமிழர் தலைநகரான திருகோணமலையில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதமான முறையில்அனுமதிப் பத்திரமின்றி மணல் அகழப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது கந்தளாய், பாலம்பட்டாறு பகுதியில் தம்பலகாமம் பகுதியை சேர்ந்த நபரும், மணலாறு பகுதியில் மகாவலி கங்கையில் இரண்டு உழவு இயந்திரங்களுடன் அனுமதிப்பத்திரமின்றி மண் அகழ்வில் ஈடுபட்ட இருவரும் வசமாக சிக்கியுள்ளனர்.

அத்துடன் மகாவலி கங்கைக்கு அருகில் சாவாறு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் உப்பு கறி மற்றும் கிண்ணியா பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.