யாழில் இருந்து புறப்பட்ட பேருந்தில் காணப்பட்ட பொதி

Report Print Theesan in சமூகம்

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை பேருந்தொன்றை சோதனையிட்ட பொலிஸார் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே குறித்த பேருந்தினை பொலிஸார் சோதனையிட்ட போது பொதி செய்யப்பட்டிருந்த 9 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

எனினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரை கைது செய்யவில்லை என தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதி வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers