கொழும்பிலிருந்து மடு திருத்தலத்திற்கு சென்றவர்கள் பயணித்த பேருந்து விபத்து: பலர் படுகாயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

கொழும்பிலிருந்து மடு திருத்தலத்திற்கு சென்றவர்கள் பயணித்த பேருந்து இன்று காலை விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த பேருந்து வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த எட்டு பேர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.