ஆவா குழுவினருக்கு இந்தியாவில் ஆயுத பயிற்சி?

Report Print Steephen Steephen in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக யாழ்ப்பாண பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கட்டணம் செலுத்தி இந்த ஆயுதப் பயிற்சி பெறப்படுவதாக தெரியவருகிறது.

இந்தியாவில் உள்ள இந்த தனியார் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால், யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவினர் கொள்ளையடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் 12 பேர் இவ்வாறு இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாகவும் பேசப்படுகிறது.

எவ்வாறாயினும் பொலிஸாருக்கு இப்படியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆவா குழுவினரை அடக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் பயிற்சிகள் பெறப்படுவதாக கூறப்படுவது தொடர்பாக தகவல்கள் கிடைத்தால், அது பற்றி விசாரணை நடத்தப்படும் எனவும் ரொஷான் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.