கொழும்பிலிருந்து சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - வவுனியா பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு, மருதானை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. நிலாவெளி பகுதிக்கு சுற்றுலா வந்த நபர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியமையாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers