அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியா? அதிர்ச்சியா?! வெளியான புதிய தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பெரிய அளவில் சம்பள அதிகரிப்பு இல்லை என நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்களின் அடிப்படையில் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு 1000 முதல் 1500 ரூபாவுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த சம்பள அதிகரிப்பில் ஓய்வூதிய வீதங்கள் திருத்தப்படும். 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் கடந்த 3 வருடங்களாக எந்தவித சம்பள அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான பொருளாதார நிலைமைக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சம்பள அதிகரிப்பு ஒன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் அரசாங்க ஊழியர்கள், இந்த சம்பள அதிகரிப்பு தங்களுக்கு போதுமானதாக இல்லை. கடந்த 3 வருடங்களின் வாழக்கை செலவு 7000 ரூபா வரை அதிகரித்துள்ளது. குறைந்த பட்ச சம்பளம் பெறும் தாம் மிகவும், கடினமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.