யாழில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம்

Report Print Sumi in சமூகம்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் குறுகியகால புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ். நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்.நாவாந்துறை சந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சகல தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலமோ அல்லது குறுகிய புனர்வாழ்வு வழங்கி விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது போராட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கைதிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வரும் வரவு செலவு திட்டத்தை பயன்படுத்துவதுடன், ஏனைய முஸ்லிம் மற்றும் பெரும்பான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் தமிழர் தரப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின், பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த கவனயீர்ப்பு போராட்டதில் கலந்து கொண்டுள்ளனர்.